நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியை சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது நன்றாகப் புரியும்.
அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
அதேவேளை, நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் தான் இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
No comments