தலைக்கவசம் அணியாது சென்று , மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பளையை சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்கு உள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
No comments