யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான , "இந்துக்களின் போர்" என்று அழைக்கப்படும் , துடுப்பாட்ட போட்டியின் 13 ஆவது ஆண்டு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து , முதலாவது இன்னிங்ஸில் அனைத்து இலக்குகளையும் இழந்து , 80 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 08 இலக்குகளை இழந்து , 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதனால் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்கள் அபார வெற்றியை பெற்றது.
No comments