சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது
மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments