Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிப்பு


யாழ்.போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துக்களால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ் போதனா வைத்தியசாலை சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும். 

குறித்த சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

வைத்தியசாலையின் புதிய கட்டட தொகுதிக்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள், எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கும், குறிப்பாக நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. 

அதனால் யாழ்.மாநகரசபை, மாவட்டச்செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். 

குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ளனர்.

 எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலை திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். 

எனவே எதிர்காலத்திலும் அது நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது. 

எனவே இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். 

யாழ்.போதனா வைத்தியசாலை கட்டட தொகுதி சூழலில் தரிந்து நின்று சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை அவ்விடத்தில் தரித்து நிற்க கூடாது என கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கூட்டம் ஒன்றில் முடிவு எடுக்கப்பட்டு , நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து , தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments