யாழ்ப்பாணம் சாவகச்சேரி - மீசாலை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் பரணீதரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவனுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனை காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவனை மீட்டு , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக உலா.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் பொலிஸார் , பேருந்து சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
No comments