வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுங்கேணி சந்தியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் போராட்டமானது , பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரையில் சென்று இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
அரச அநீதிக்கு எதிரான முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் செல்லத்துரை சசிகுமார் கோரியுள்ளார்.
No comments