பிரதமர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் திங்கட்கிழமை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார்.
இதன்போது சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான ‘போவா மாநாட்டில்‘ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments