ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பின்னரே , தமிழரசு கட்சி அது தொடர்பில் கலந்துரையாடி எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என தீர்மானிக்க முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் மக்கள் ஆணையற்ற ஒருவரே. எனவே, சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல்நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
அது மாத்திரம் அன்றி தற்போது, மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றமே உள்ளது. அதனால் அதனையும் வெகுவிரைவில் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நடத்த வேண்டிய தேர்தல்களைக் கூட நடத்தாமல் இருக்கின்ற இந்த ஐனாதிபதி இனியும் தாமதிக்காது ஐனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கேட்ட போது, இலங்கைத் தமிழரசுக் கட்சி இதைப் பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை. தேர்தல் அறிவிக்கப்படுகின்ற போது இது சம்பந்தமாகக் கலந்துரையாடி முடிவெ டுப்போம்.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம். என தெரிவித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தியினர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்து ஆதரவைக்
கோரவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது, அடுத்த வாரம் அவர்கள் எம்மைச் சந்திக்கவுள்ளனர். அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், ஜனாதி பதித் தேர்தல் என்று வருகின்ற போதுஅதில் யார், யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகின்றபோது நாங்கள் உரிய முடிவைத் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.
No comments