வீதியோரங்களில் நிழல்களுக்காக நடப்பட்ட மரங்களை உரிய ஒழுங்குகள் இன்றி வெட்டி , வீதிகளில் போட்டு விட்டு சென்றமையால் வீதியில் செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, கலாசாலை வீதியில் , நிழல் தரும் மரங்கள் வீதியோரமாக நடப்பட்டு , அவ்வீதியில் வசிப்போர் தண்ணீர் ஊற்றி, பராமரித்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென மின்சார சபை கூறியதாக சிலர் வீதியோராமாக இருந்த மரங்களை முறையின்றி கிளைகளை வெட்டி வீதிகளில் போட்டு சென்றுள்ளனர்.
இதனால் மரங்கள் பட்டு போகும் நிலைமை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மின் வடங்களுக்கு மர கிளைகள் சென்றால் , அவற்றை உரிய முறையில் சீராக வெட்டி அகற்றலாம். அவ்வாறு இல்லாது நினைத்தப்பட்டிற்கு கிளைகளை வெட்டி எறிந்து விட்டு சென்றுள்ளார்கள்.
மரங்களை வெட்டுவதாயின் உரிய அனுமதிகள் பெற வேண்டிய நிலைகள் உள்ள போதிலும் , அது எதனையும் கருத்தில் கொள்ளாது தாம் நினைத்த பாட்டிற்கு மர கிளைகளை சீரின்றி வெட்டி எரிந்தமை கண்டிக்க தக்கதே. எனவே இனிவரும் காலங்களில் ஆவது மர கிளைகளை வெட்டும் போது ,மரங்களை கவனத்தில் எடுத்து சீராக கிளைகளை வெட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
No comments