யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனின் உடைமையில் இருந்து கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் , சிறுவனிடம் கசிப்பினை கொடுத்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments