யாழ்.கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய கும்பாபிஷேக மலர் வெளியீடு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி கந்தசாமி தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ளது.
ஆலய திருப்பணிச் சபையின் தலைவர் செ.தவகுமாரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் வரவேற்புரையை ஆலய திருப்பணிச் சபை வெளிநாட்டு ஒன்றியப் பொறுப்பாளர் வே.தர்சன், ஆசியுரையை ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ முத்துக்குமார கணேசக்குருக்கள், மலர் அறிமுக உரையை திருப்பணிச் சபை உறுப்பினர் த.தவகரன், நூல் ஆய்வுரையை நல்லூர் ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆற்றவுள்ளனர்.
கயிற்றசிட்டி கந்தசாமி ஆலய கும்பாபிஷேக மலர் அனுசரணையாளர் கைலாயப்பிள்ளை சுகிதரன் மலரை வெளியிட்டு வைக்க ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ முத்துக்குமார கணேசக்குருக்கள் முதற்பிரதியை பெறுவார்
No comments