Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மன்னாரில் விபத்து - அருட்தந்தை உயிரிழப்பு


மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடம்பன் நாற்சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது.

 இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments