யாழ்ப்பாணம் மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான செல்வன் சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாணவன் இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்திருந்தார்.
மாணவனின் மரணச்சடங்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தின் போது, சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
No comments