Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் , பிரதேச வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்


யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட  நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்றைய தினம் திங்கட்கிழமை திறந்து வைத்தார். 

அந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

நிகழ்வில் ஆளூநர் உரையாற்றும் போது, 

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நோயாளர்களை அதிகரித்து சுகாதாரத் துறையை வீழ்ச்சியடைய செய்ய தான் ஒருபோதும் விரும்பவில்லை. தற்கால உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும். 

கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகிறது. 

மேலும் இளவாலை கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் எனக்கு உள்ளது. 

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

அத்துடன் இளவாலை கிராம அபிவிருத்திக்காக செயற்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார். 





No comments