முல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments