யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.
அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது.
இருந்த போதும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சேவையாற்றி வருகின்றோம்.
எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம்.
அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments