Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்


பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

அதேபோன்று டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள்   மலேசியாவில் பணிப்புறிவதற்கான  10ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார். 

அதற்காக பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

தற்போது இவ் ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1853 இளைஞர், யுவதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில்,

 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து, இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சிறந்த நிர்வாகத்திரன் ஊடாக மிக விரைவாக இலங்கையை மீட்டெடுத்தனர். 

ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தது. 

அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேசிய அரசாங்கம் உதவுவதற்கு  காத்திருப்பதாகவும் டட்டுக் சரவணன் தெரிவித்தார்.

No comments