இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கட்சுகி கோட்டாரோ மற்றும் இரண்டாவது செயலாளர் இமாய் கௌரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது
No comments