புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் ஆலய திருவிழாவொன்றுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டமையால் மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோன்று அதிக சத்தமாக பாடல் ஒலிக்க விடப்பட்ட வேளை , இளைஞர்களிடம் பாடலின் சத்தத்தை குறைக்குமாறு கோரிய போது , இளைஞர்கள் தர்க்கப்பட்டு, ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய கண்ணாடிகளை உடைத்து, சேவைகளுக்கு இடையூறும் ஏற்படுத்தினார்.
பின்னர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இம்முறையும் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி பாவனை அனுமதி வழங்கப்பட்டு மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சேவைக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்ததமாக பாடல்கள் ஒலிபரப்பபட்டுள்ளன.
இது தொடர்பாக வைத்தியசாலை வைத்திய அதிகாரியினால் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாக தரப்பினரை தொடர்பு கொண்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அதிருப்தியை வெளியிட்டார் என அறிய முடிகிறது.
இளைஞர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்
No comments