பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந.குமாரசவாமிக் குருக்கள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின் ஆதீனகர்த்தாவாக இருந்து ஆலயத்தை வழிநடாத்தி வந்தார்.
அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
No comments