திருகோணமலை பகுதியில் நபரொருவர் மது போதையில் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன் கணவன் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அக்போபுர - 85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட அவர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன் கணவன் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments