Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள் விளக்கமறியலில்


வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த தன்னை வழிமறித்து இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாக , தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஐந்து இளைஞர்களை கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , ஐவரையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

No comments