இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நண்பகல் யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments