இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 32 KM தூரமுடைய பாக்கு நீரிணையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவனான 13 வயதான ஹரிஹரன் தன்வந்த்
பாக்கு நீரிணை கடந்து உலக சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்த் அவர்களை பாராட்டி Global world Record ஊடாக சான்றிதழ் மற்றும் பதக்கமும் இலங்கைக்கான இந்திய துணை தூதூவரால் வழங்கப்பட்டது.
கடல்வளம் மாசடைதல், இளவயது போதைப்பழக்கம் என்பவற்றுக்கு எதிரான கவனயீர்ப்பாகவும், தனது நீச்சல் சாதனை முயற்சியை இன்றைய தினம் காலை 05.30 மணிக்கு தனுஸ்கோடிக்கரையில் ஆரம்பித்து, எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே தலைமன்னார் கரையில் நிறைவு செய்தார்.
13 வயதில் பாக்குநீரிணையைக் கடந்து சாதித்து, இள வயது மாணக்கர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய தன்வந்த்குக்கும் அவரது பெற்றோர்களான ஹரிஹரன் தயாளினியின் தம்பதியினருக்கும் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
பாக்குநீரினையை நீந்திக்கடந்த மிகக் குறைந்த வயதுடையவர் தன்வந்த் என்பது குறிப்பிடதக்கது.
No comments