யாழ்ப்பாணத்தில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற ஹரிகரன் இசை நிகழ்வு தொடர்பிலான காணொளிகளை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு நொர்தேர்ன் யுனி நிறுவனத்தினரால்,கடந்த 23ஆம் திகதி ஸ்ட்ரைக் (copyright strike) வழங்கப்பட்டு இருந்தது.
ஒரு யூடியூப் சேனலுக்கு மூன்று copyright strike வழங்கப்பட்டால் அந்த சேனல் நிரந்தரமாக முடக்கப்படும் என்பதால் , copyright strike கினை அகற்றி உதவுமாறு யூடியூப் சேனல் உரிமையாளர்களால் நொர்தேன் யுனி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் முதல் கட்டமாக கோரிக்கை விடுத்த ஐந்து சேனல் உரிமையாளர்களின் copyright strike கினை நிறுவனம் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
எதிர்வரும் நாட்களில் ஏனையவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட copyright strike க்கினை மீள பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments