இலங்கையின் இருவேறு இடங்களில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்து பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றினுள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் மேலும் இரு ஆண்களும் கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments