காடுகள் மற்றும் புதுமை என்னும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் திரு ம. .சசிகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காடுகளின் முக்கியத்துவம், வனவிலங்குகளை இனங்காணல் மற்றும் வனவிலங்குகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவற்றின் பாதுகாப்பு குறித்து கதைகள்,புகைப்படங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை ஏற்படுத்தினார்.
அத்துடன் மாணவர்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்
No comments