அம்பாறை – பெரிய நீலாவணை – பாக்கியதுல் சாலியா வீதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை தானும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளார்.
முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது15) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் , தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்ற பின்னர் தந்தையும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 63 வயதான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்ற நபரே காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments