யாழில் ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது.
சங்கானை பகுதியில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதனால் இளைஞனை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று , இளைஞனை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.
No comments