கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் , வீட்டை விட்டு வெளியேறிய பெண் , வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கை சேர்ந்த இராசரத்தினம் செல்வரதி (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் கணவரும் , மகளும் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெரும் சத்தமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியே வந்த வேளை , திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருபவர் என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments