யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது புதிய இந்திய துணைத்துதரை வாழ்த்திய நல்லை ஆதீன குரு முதல்வர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
குறித்த சந்திப்பின் போது அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி அண்மையில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments