இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து புறப்பட்ட படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்கு என்று போராடினர்.
இதேவேளை கடற்றொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச கடற்பரப்பில் செல்லக்கூடாது என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments