யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுரியில் அநீதியான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கூறி பொற்றோர் பீடாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்
குறித்த கடிதத்தில்,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுரியில் இடம்பெற்று வரும் அநீதியான செயற்பாடுகள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுரியில் அண்மைகாலமாக இடம்பெற்று வரும் பல்வேறு செயற்பாடுகள் மாணவர்களின் நலன்களை பாதித்து வருவதை பெற்றோர்களாகிய நாம் தங்களின் கவனத்திற்கு முன் வைக்கின்றோம்.
அதாவது இந்துமாமன்றம் மாணவர்களிடம் இருந்து பலதொகை பணத்தை பெற்று வருவதுடன் மாணவர்கள் அது தொடர்பில் கேட்கப்படுகின்ற போது மாணவர்களை அவதூறு செய்தும் பழிவாங்கும் செயற்பாடுகளிலும் மன்றத்தின் பொறுப்பு விரிவுரையாளர் செயற்பட்டு வருகின்றார்.
மேலும் மாணவர்களை குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் சாறி மாற்றி கோயிலுக்கு வரவேண்டும் எனவும் குறிப்பிட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கட்டாயம் 12 மாலை கட்டி கொடுக்கப்பட வேண்டும் எனவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
அத்துடன் கோயிலில் தேவாரம் மற்றும் பஞ்சபுரணம் ஓதுவது என்றாலும் குறித்த விரிவுரையாளரின் எழுத்து மூலம் அனுமதி பெற்றே ஓதவேண்டிய கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளது.
மன்ற கூட்டங்களில் மாணவர்கள் ஏதாவது கேட்டால் நானா நீயா மன்றத்துக்கு பொறுப்பு என அதட்டி வெருட்டி மாணவர்களை கேள்வி கேட்காமல் கட்டுப்படுத்தி வருகின்றார்.
மன்றத்தில் கணக்கு விபரம் கேட்டால் நாங்கள் இருந்தபாடு இல்லை. உண்டியல் திறப்பது கூட எங்களுக்கு தெரியாது காசு பற்றி மன்றத்தில் எதுவும் தெரிவிப்பதில்லை ஆனால் கையொப்பம் மட்டும் வைக்க எங்களை பயன்படுத்திக் கொள்கின்றார் என குறிப்பிடுகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற மணி விழாவிற்கு இந்து மாமன்றம் சார்பாக பீடாதிபதிக்கு அன்பளிப்பு கேடயம் கொடுப்பதற்காக தம்மிடம் வகுப்புரீதியில் 200 வாங்கியதாகவும் ஆனால் அன்பளிப்பு பொருள் வழங்கப்படவில்லை அத்துடன் அது தொடர்பில் இதுவரை எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
மேலும் குறித்த விரிவுரையாளர் தொடர்பில் மாணவர்கள் இவர் எவ்வாறு விரிவுரையாளராக வந்தவர் என கேட்குமளவுக்கு மேற்படி விரிவுரையாளர் வகுப்பில் கற்பிப்து இல்லை ஒழுங்கான பாடத்திட்டம் நிறைவேற்றுவதில்லை என பொறுப்பான உபபீடாதியிடம் பல தடவைகள் மாணவர்கள் தெரிவித்தும் தொடர்ந்து அவர் கல்லூரி நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டு அவருக்கு அனுசரணை வழங்கி வருகின்றனர் என்ற நிலைமை காணப்படுகின்றது.
இத்த பின்னணியில் அண்மையில் இந்து சமய பாடத்திற்கு பொறுப்பாக ஒரு விரிவுரையாளர் நியமிக்கப்பட்டும் நிர்வாகம் மறைமுகமாக சில ஒப்பந்தங்களை செய்து அவருக்கு அப்பதவியை வழங்காமல் பழைய பீடாதிபதி மற்றும் ஒரு சில மூத்த விரிவுரையாளர்கள் காய் நகர்த்தியுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால் ஏனைய மன்றங்களுக்கு பாடம் விரிவுரையாளர்களே பொறுப்பாக உள்ளமை வழமை.
சார்ந்த ஆகவே பீடாதிபதி ஆகிய நீங்கள் இவ்விடங்கள் தொடர்பில் கவனம் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.
No comments