Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலராலும் கொண்டாடப்படும் "யாழ்ப்பாணம் - A Melodic Tale"


“யாழ்ப்பாணம் வந்தாலே மனசெல்லாம் சந்தோஷம் - உயிருள்ள வரை இந்த நினைவே போதும் “ எனும் பாடல் யூடியூப் சேனலில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.  

PALM CEYLON TALKIES சார்பில் லட்சுமணன் லவன் தயாரிப்பில் அருளானந்தம் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள  “யாழ்ப்பாணம் – A Melodic Tale” எனும் காணொளி பாடல் வெளியாகியுள்ளது. 

இந்தப்பாடலுக்கான வரிகளை துவாரகன் ரங்கநாதன் எழுதியுள்ளதுடன், பிரணவன் புவனேந்திரன் இசையமைத்துப்பாடியுள்ளார்.

காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவினை ரஜீபவன் சிறிபவன் மேற்கொண்டிருப்பதுடன், படத்தொகுப்பு பணிகளை நிஷாகரன் ரங்கநாதன் கவனித்துள்ளார்.

வர்ணச்சேர்க்கையாளராக ரிஷி செல்வமும், கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக ஸ்ரீ துஷிகரனும் பணியாற்றியுள்ளனர். டைட்டில் டிஸைன் யுமுனா ஏகாம்பரம் வடிவமைத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தின் அழகிய வாழ்வியலை இதை விட அழகாக காட்சிப்படுத்துவது கடினம். நம் வாழ்வில் கண்ட, ரசித்த, கொண்டாடி தொலைத்த பொழுதுகள் கண்முன்னே காட்சிகளாக விரியும் போது வார்த்தைகள் மௌனித்து போகின்றது.

இசை, ஒளிப்பதிவு, காட்சிப்படுத்திய விதம் என அனைத்தும் அருமை. இசையுடன் யாழ்ப்பாணத்தை சுற்றிவர கசக்குமா என்ன?என பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 







No comments