எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றாக்கக் கூடிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் ரொறொன்ரோ நகரில் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
"நாடாளுமன்றத் தேர்தலை முன்னதாக நடத்தினால் நல்லது என்கிறார் பெசில். ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம் என்பதால். ரணிலை ஆதரித்தால் மொட்டு கட்சி அழிந்து விடும். அல்லது வேறு யாரையாவது முன்னிறுத்த வேண்டும். வேறொருவர் முன்னிறுத்தப்பட்டால் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்காது.
பொதுத்தேர்தலை ரணிலால் மாத்திரமே முன்கூட்டி நடத்த முடியும். இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ரணிலின் அதிகாரம் நாளை முடிவுக்கு வரும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அமைய செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது.
மக்கள் அழுத்தங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர், தேர்தலில் பாடம் புகட்டுவதற்காக. நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள். மக்களினதும் ஆட்சியாளரினதும் எதிர்பார்ப்புக்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை அமைப்போம்." என்றார்.
No comments