உடவலவ - கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments