திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.
பொலிஸார் அங்கு சென்றதும் சூதாட்ட நிலையத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments