Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழை வந்தடைந்த மடுமாதா - வீடியோ இணைப்பு


மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை எடுத்து வரப்பட்டுள்ளது.

யாழ் மறைமாவட்டத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை எடுத்து வரப்பட்ட திருசொரூபம்

யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக் கோட்டங்களின் பங்குகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் திருச்சுரூபம் எடுத்து வரப்படவுள்ளது.

மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100வது ஆண்டு யூபிலி விழாவிற்கு ஆயத்தமாக மருத மடு அன்னையின் திருச்சுரூபமானது மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக திருச்சுரூபமானது யாழ் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.

இப் புனித நிகழ்வு மருதமடுத் திருத்தலத்திற்குச் சென்று வர முடியாத அன்னையின் பக்தர்களுக்குப் பெரும் ஆசீர்வாதம் ஆகும் எனவும் மருதமடு அன்னையின் வருகையைத் தகுந்த ஆயத்தத்துடன் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.





No comments