Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது - பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்


யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த வழக்கு எதிர் மனுதாரர்களின் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள்  கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக  தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை , அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையிலையே ,  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால்  , தன்  மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை  மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு  எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது வாதங்களை முன் வைத்தனர். 

அதன் போது, குற்றவாளிகளோ , சந்தேகநபர்களோ , யாரும் சட்டத்தினை ஆயுதமாக பயன்படுத்த முடியாது என எதிர்மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார். 

அத்துடன் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரரான துணைவேந்தர் பரீட்சை கடமைக்கு சென்றமையால் , இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகவில்லை என மன்றுக்கு அறிவித்தார். 

அதனை தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது பூர்வாங்க ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர். 

அதனை அடுத்து , எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்குமாறு தெரிவித்த மன்று , வழக்கினை எதிர்வ்ரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு திகதியிட்டது. 


No comments