இலங்கையில் 60 முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாற்பது வயதுக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 26 மட்டுமே.
இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்குதல் காலத்தின் தேவை.
வயது முதிர்ந்தவர்கள் இந்த சூழ்நிலையை இளையோருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
நாட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுகிறது. இதனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.
No comments