யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
நாவாந்துறைப் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்கு முன்பாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே அவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments