வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினர் வரவேற்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
பின்னர் கல்லூரி மண்டபத்தில் இப்தார் நிகழ்வுள் இடம்பெற்றிருந்தது, இதன்போது விருந்தினர்களுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ், மத தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்
No comments