விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தனது மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் , கணவன் - மனைவியை காப்பாற்ற சென்ற பிரதேச வாசியுமாக மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர்த்தேக்கத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வந்த தம்பதியினரில் மனைவி நீரில் இறங்கியுள்ளார். அவ்வேளை அவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அதனை கண்ணுற்ற கணவன் மனைவியை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளார். அவரையும் நீர் அடித்து சென்ற வேளை , இருவரையும் நீர் அடித்து செல்வதனை கண்ணுற்ற பிரதேச வாசி ஒருவர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை அவரும் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கணவனும் , அவரது மனைவியான 22 வயதுடைய யுவதியும் இவர்களை காப்பாற்ற முயன்ற 32 வயதுடைய பிரதேச வாசியுமே உயிரிழந்துள்ளனர்.
No comments