Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வு செய்தால் பாதிப்பு இல்லை என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க தயாரா ?


பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வால் எந்த பாதிப்பும் இல்லை என ஏன் இதுவரை யாரும் ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கவில்லை என கிராம சக்தி மக்கள் சங்க தலைவர் செல்லப்பா குழந்தை வேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

பொன்னாவெளி பகுதியில் சுண்ணக்கல் அகழ்வை தடை செய்ய வேண்டும் என வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலர்கள் ,பிரதேச செயலர்கள் , அமைச்சர் என 25 தரப்பினருக்கு 2 ஆயிரத்து 500 பேரின் கையொப்பங்களுடன் மகஜர்களை கையளித்துள்ளோம். 

இதுவரையில் எவரும் அதனை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் தான் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம். 

இது அமைச்சருக்கு எதிரான போராட்டம் அல்ல. எமது வாழ்வுக்கான போராட்டம். எமது நிலத்தை அகழும் போது கடலில் எமது கிராமம் மூழ்கும் அபாயம் உண்டு. 

எமது பகுதியில் 700 ஏக்கர் நிலத்தை 100 அடி ஆழத்திற்கு அகழ உள்ளனர். அதனால் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டு , அவற்றினுள் கடல் நீர் உட்புகும். அந்த நீர் பின்னர் சுண்ணாம்பு பாறைகள் ஊடாக நிலத்தடி நீரில் கலந்து அயல் கிராமங்களின் நன்னீரும் உவர் நீராகும். 

இன்று வரை சுண்ணக்கல் அகழ்வினால் ஏற்படும் சாதக பாதக தன்மைகள் தொடர்பில் எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை. 

பொன்னாவெளியை சூழவுள்ள கிராஞ்சி , வலைப்பாடு வேராவில் , பாலாவி போன்ற ஏனைய கிராமங்களுக்கு பாதிப்பு இல்லை என விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு , அறிவிக்க முடியுமா ?

இதுவரையில் எதற்காக சுண்ணக்கல் அகழ்வினால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பில் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ள இவர்கள் தயாராக இல்லை என கேள்வி எழுப்பினார். 

No comments