Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமிழ் மக்களின் அபிலாசைகள் ஜே.வி.பி க்கு புரியவில்லை


வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியுள்ளது  என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

13 ஆவது அரசியலமைப்பு அதிகாத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும், அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும், அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது. 

வடக்க கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. 

இலங்கை வரலாற்றில் பண்டா  செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க 13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். 

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்க வில்லை. 

இதன்மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.

இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது  ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.

இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை. 

அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு மீனவர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. 

மாறாக எடுத்ததற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜே.வி.பி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

இந்திய பருப்பை உண்ண மாடம்டோம், இந்தியாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம், தீவுப் பிரதேசங்கள் இந்தியாவிற்கு தாரைவார்க்கப்படுகின்றது என் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர். 

அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்தபோதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை என மேலும் தெரிவித்தார். 


No comments