Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, May 19

Pages

Breaking News

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்!


நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது.

எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கபடக்கூடும் என அறியமுடிகின்றது.