சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இடது கால் காயமடைந்த நிலையில் மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
No comments