யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு சொந்தமான மரமொன்றினை வெட்ட முயற்சித்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி கலாசாலை வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரான செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சொந்தமான மரம் ஒன்றினை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
அதனை அடுத்து அவரை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments