Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெற்றிடங்களை நிரப்பினாலே தேசிய வைத்தியசாலையாக மாற்றலாம்


யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையின் 04 வது தேசிய வைத்தியசாலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டிருந்தபோதிலும்  அதன் தேவைகள் நிலைப்பாடு பற்றி சுகாதார அமைச்சிடம் அறிவித்திருக்கின்றோம்.

1350 படுக்கைகளுடனான விடுதியும், 325 வைத்தியர்களும், 680 தாதியர்களுமாக மொத்தமாக  2,150 நபர்கள் கடமைபுரிந்து வருகின்றனர். தேசிய வைத்தியசாலையாக்குவதற்கு 200 மேலதிக தாதியர்கள் ஆளணியும், 100 வைத்தியர்கள் ஆளணியும் தேவையாகயுள்ளது.

இவ்வாறு அதிகரிப்பு செய்யப்படும் போது தேசிய வைத்தியசாலையாக மாற்ற சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். 

அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் 320 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றி வருகின்றனர். வைத்திய வெற்றிடங்கள் அனேகமான நிரப்பட்டுள்ளது. மேலும் சில நிபுணர்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றது.

சிறப்பு பிரிவுகளுக்கு குறைந்தது  நூறு வைத்தியர்கள் தேவையாகயுள்ளது. இருதய சிகிச்சைப்பிரிவு, இருதய சத்திர சிகிச்சைப்பிரிவு போன்ற வைத்திய துறைக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. அதற்கான ஆளனி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சு  முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார். 

No comments